​​ எங்களை விட்டுக் கொடுக்காதீர்கள்..! ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து விராட் கோலி உருக்கமான பதிவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எங்களை விட்டுக் கொடுக்காதீர்கள்..! ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து விராட் கோலி உருக்கமான பதிவு

எங்களை விட்டுக் கொடுக்காதீர்கள்..! ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து விராட் கோலி உருக்கமான பதிவு

Aug 14, 2018 4:41 PM

இந்திய கிரிக்கெட் அணியை ஒரு போதும் விட்டுக் கொடுக்கக் கூடாது என ரசிகர்களை கேப்டன் விராட் கோலி கேட்டுக் கொண்டுள்ளார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மோசமாக தோல்வி அடைந்தது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், ஃபேஸ்புக் பக்கத்தில் கேப்டன் விராட் கோலி உணர்ச்சிப்பூர்வமாக பதிவிட்டுள்ளார். அதில், சில சமயங்களில் வெற்றி பெறுவதாகவும், மற்ற நேரங்களில் கற்றுக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு போதும் தங்களை ரசிகர்கள் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ள கோலி, தாங்களும் ரசிகர்களை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று உறுதிபடத் தெரிவித்துக் கொள்வதாகவும் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.