​​ இன்று நடக்கிறது தி.மு.க. செயற்குழுவின் அவசரக் கூட்டம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இன்று நடக்கிறது தி.மு.க. செயற்குழுவின் அவசரக் கூட்டம்

Published : Aug 14, 2018 11:57 AM

இன்று நடக்கிறது தி.மு.க. செயற்குழுவின் அவசரக் கூட்டம்

Aug 14, 2018 11:57 AM

தி.மு.க. செயற்குழுவின் அவசரக் கூட்டம், கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது.

தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி கடந்த 7ஆம் தேதி காலமானார். இந்நிலையில், செயற்குழுக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்திருந்தார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பொதுச்செயலாளர் முன்னிலையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. செயற்குழு உறுப்பினர்களுடன், தலைமைக் கழக நிர்வாகிகளும் இதில் பங்கேற்கின்றனர்.