​​ இசைக்கச்சேரியின் போது, மரத்தால் அமைக்கப்பட்ட தளம் உடைந்து கடலில் விழுந்ததில் 300க்கும் மேற்பட்டோர் காயம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இசைக்கச்சேரியின் போது, மரத்தால் அமைக்கப்பட்ட தளம் உடைந்து கடலில் விழுந்ததில் 300க்கும் மேற்பட்டோர் காயம்


இசைக்கச்சேரியின் போது, மரத்தால் அமைக்கப்பட்ட தளம் உடைந்து கடலில் விழுந்ததில் 300க்கும் மேற்பட்டோர் காயம்

Aug 14, 2018 12:32 AM

ஸ்பெயினில், இசைக்கச்சேரியின் போது, மரத்தால் அமைக்கப்பட்ட தளம் உடைந்து கடலில் விழுந்த விபத்தில் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

விகோ- நகரில், (Vigo)-ல் துறைமுகம் ஒன்றில் ராப் இசைக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. அதில் பாடகர் Jump எனக் கூறியதும் அனைவரும் ஒரே நேரத்தில் குதித்ததாகக் கூறப்படுகிறது. இதில் பாரம் தாங்காமல் மரத்தால் அமைக்கப்பட்ட தளம் உடைந்து ஒருவர் மீது ஒருவராக கடலில் விழுந்தனர்.

இதில், மீண்டு வந்த ஒவ்வொருவரும் உடனடியாக மற்றவரை மீட்கத் தொடங்கினர். மீட்புப் படையினரும் வந்து காயமடைந்த 300-க்கும் மேற்பட்டோரை மீட்டு அருகிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் வெளிநாட்டவர் யார்? யார்? என கண்டறியும் பணி நடைபெறுகிறது.

காயமடைந்த 300-க்கும் மேற்பட்டோரில் 5 பேரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உடனடி விசாரணைக்கு மேயர் உத்தரவிட்டுள்ளார்.