​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தட்பவெப்பநிலைக்கேற்ப உடல் வெப்பநிலையை சீராக வைக்க ராணுவ வீரர்களுக்கு பிரத்யேக உடை..! 9ஆம் வகுப்பு மாணவி சாதனை

Published : Aug 12, 2018 8:55 PM

தட்பவெப்பநிலைக்கேற்ப உடல் வெப்பநிலையை சீராக வைக்க ராணுவ வீரர்களுக்கு பிரத்யேக உடை..! 9ஆம் வகுப்பு மாணவி சாதனை

Aug 12, 2018 8:55 PM

தட்பவெப்பநிலைக்கேற்ப ராணுவ வீரர்களின் உடல் வெப்பநிலையை சீராக வைக்க உதவும் பிரத்யேக உடையை புதுச்சேரியைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி வடிவமைத்து சாதனை புரிந்துள்ளார். 

image

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த முருகன் - அய்யம்மாள் தம்பதியின் மகள் தேவசேனா. தேங்காய்த்திட்டில் உள்ள ஆச்சாரியா ஏகலைவா சர்வதேசப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயிலும் தேவசேனாவுக்கு, அறிவியலின் அடிப்படையில் புதிய சாதனங்களைக் கண்டுபிடிப்பதிலும் தீராத ஆர்வம்.

image

பள்ளிகளில் நடத்தப்படும் அறிவியல் கண்காட்சிகளில் பங்கேற்பது வழக்கம். உடலை வாட்டும் பல்வேறு வெப்பநிலையில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு உதவ ஏதேனும் செய்ய வேண்டுமென்ற யோசனையில், பிரத்யேக உடை ஒன்றை வடிவமைத்துள்ளார் தேவசேனா. இந்த உடையை அணிந்து கொண்டால், குளிர் நேரத்தில் வெப்பமும், வெயில் நேரத்தில் குளுமையும் கிடைக்கும்.

image

சீருடையின் உள்பகுதியில் பஞ்சு போன்ற பொருளும் பொதிந்து வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை சாதனத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், உடையை அணிந்திருப்பவரின் உடல் வெப்பநிலையை சீராக்க இந்த பஞ்சு உதவும்.

image

2 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்ட இந்த தட்பவெப்ப சீரமைப்பு சாதனத்தை படிப்படியாக முக்கால் கிலோ அளவுக்கு குறைத்துள்ளார் மாணவி தேவசேனா. இதை 350 கிராமுக்கு குறைக்க, பைபரைக் கொண்டு வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறுகிறார் அவர்.

image

ராணுவ வீரர்களின் நலனுக்காகவே பிரத்யேகமாக வடிவமைத்துள்ள இக்கருவியை மேம்படுத்த அரசு உதவ வேண்டுமென்ற கோரிக்கையையும் முன்வைக்கிறார் மாணவி தேவசேனா. உடல் தட்பவெப்பத்தை சீராக வைக்கும் உடை மட்டுமின்றி, ராணுவத்திற்கு தேவையான மேலும் பல கருவிகளை வடிவமைக்கும் யோசனைகள் தன்னிடம் உள்ளதாக உள்ளதாக கூறுகிறார் இந்த இளம் கண்டுபிடிப்பாளர்.