​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குமரி, நெல்லை, திண்டுக்கல், கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Published : Aug 12, 2018 6:04 PM

குமரி, நெல்லை, திண்டுக்கல், கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Aug 12, 2018 6:04 PM

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அதன் தாக்கத்தால் கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று இரவுக்குள் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் கனமழை மீண்டும் தீவிரமாக வாய்ப்புள்ளதால் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வு மையம் விளக்கமளித்துள்ளது. மேலும், மத்திய மேற்கு வங்க கடல், தெற்கு ஆந்திரா கடல் பகுதியில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி வலுவிழந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் மணிக்கு 55 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும் என்பதால் அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.