​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆந்திராவிலிருந்து தடை செய்யப்பட்ட சிலிக்கான் மணல் கடத்தல்

Published : Aug 12, 2018 1:05 PM

ஆந்திராவிலிருந்து தடை செய்யப்பட்ட சிலிக்கான் மணல் கடத்தல்

Aug 12, 2018 1:05 PM

ஆந்திராவில் இருந்து சட்ட விரோதமாக சிலிகான் மணல் கடத்தி வந்த 22 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கும்மிடிப்பூண்டி போலீசார் எளாவூர் சோதனை சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, தொடர்ந்து வரிசையாக வந்த லாரிகளை மடக்கி சோதனையிட்ட போது, அவற்றில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சிலிகான் மணல் ஏற்றி வந்ததும், அவை அனுமதியின்றி கடத்தி வரப்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து, மணல் கடத்திய ஓட்டுநர்களை கைது செய்ய முற்பட்ட போது, 18 பேர் தப்பி ஓடிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனைதொடர்ந்து, 22 லாரிகளை பறிமுதல் செய்த போலீசார், 6 பேரை கைது செய்துள்ளனர்.