​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குமரி, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு, மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாமென்றும் எச்சரிக்கை

Published : Aug 12, 2018 12:13 PM

குமரி, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு, மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாமென்றும் எச்சரிக்கை

Aug 12, 2018 12:13 PM

கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில்  இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், மத்திய மேற்கு வங்க கடல், தெற்கு ஆந்திரா கடல் பகுதியில் உள்ள மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. இதனால், 5 மாவட்டங்களில் ,இன்று கனமழை பெய்யுமென அந்த மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்னியாகுமரி மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் கடல் காற்று மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகம் வரை வீசும் எனவும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அந்த மையம் கூறியுள்ளது.