​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நிலம், நீரில் இருந்தபடி பறக்கும் விமான சேவை கொள்கை அளவில் மத்திய அரசு ஒப்புதல் - சுரேஷ் பிரபு

Published : Aug 12, 2018 4:38 AM

நிலம், நீரில் இருந்தபடி பறக்கும் விமான சேவை கொள்கை அளவில் மத்திய அரசு ஒப்புதல் - சுரேஷ் பிரபு

Aug 12, 2018 4:38 AM

ஒடிசா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நிலத்திலும், நீரிலும் இருந்து பறக்கக் கூடிய விமானங்களுக்கான நிறுத்துமிடம் அமைக்க மத்திய அரசு கொள்கை அளவில் அனுமதி வழங்கி உள்ளது.

image

இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விமானப் போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபு, நீர் நிலையில் ஏரோ டிரோம் (Aero Drome) எனப்படும் விமான நிறுத்துமிடம் அமைக்க பல்வேறு மாநிலங்களுக்கு கொள்கை அளவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் இதற்கென அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், குஜராத்தின் சபர்மதி, சர்தார் சரோவர் அணை மற்றும் ஒடிசாவின் சில்கா ஆகிய இடங்களில் முதற்கட்டமாக பணிகள் தொடங்கப்படவுள்ளதாகவும்  பதிவிட்டுள்ளார். நிறுத்துமிடம் அமைப்பதற்கான விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.