​​ பயணிகளுக்கான இலவச காப்பீட்டை ரத்து செய்ய ரயில்வே முடிவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பயணிகளுக்கான இலவச காப்பீட்டை ரத்து செய்ய ரயில்வே முடிவு


பயணிகளுக்கான இலவச காப்பீட்டை ரத்து செய்ய ரயில்வே முடிவு

Aug 12, 2018 4:06 AM

ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச காப்பீடு, வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து ரத்து செய்யப்பட உள்ளது.

2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் ஐஆர்சிடிசி சார்பில் ரயில் பயணிகளுக்கு இலவச காப்பீடு வழங்கப்பட்டு வந்தது. இதன்படி, ரயில் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாயும், ஊனமுற்றால் ஏழரை லட்சம் ரூபாயும், காயமுற்றால் 2 லட்சம் ரூபாயும் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டது. இந்த முறை ரத்து செய்யப்பட உள்ளதாக ஐஆர்சிடிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டிக்கெட் முன்பதிவின்போதே காப்பீடு வேண்டுமா வேண்டாமா என்று விண்ணப்பத்திலே குறிப்பிடும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. காப்பீட்டுக்காக செலுத்த வேண்டிய கட்டணம் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.