​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

Published : Aug 11, 2018 3:08 PM



தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

Aug 11, 2018 3:08 PM

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மழைபெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் தெற்கு ஆந்திரா கடல் பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில், அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழைபெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் கடல் காற்று மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகம் வரை வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் லேசானது முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.