​​ பாகிஸ்தான் நடிகைக்கு பிரபல ஓட்டல் நிர்வாகம் கொடுத்த பாலியல் துன்புறுத்தல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாகிஸ்தான் நடிகைக்கு பிரபல ஓட்டல் நிர்வாகம் கொடுத்த பாலியல் துன்புறுத்தல்

Published : Aug 11, 2018 1:33 PMபாகிஸ்தான் நடிகைக்கு பிரபல ஓட்டல் நிர்வாகம் கொடுத்த பாலியல் துன்புறுத்தல்

Aug 11, 2018 1:33 PM

ராஜா நட்வர்லால் படத்தில் அறிமுகமாகி பாலிவுட்டில் நடித்து வரும் பிரபல பாகிஸ்தான் நடிகை ஹூமைமா மாலிக், லாகூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் அறையில் தமக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து முகநூலில் சில ஆவணங்களுடன் பதிவிட்டிருக்கிறார்.

நிசாத் என்ற அந்த ஓட்டல் அறையில் தமக்கு நேர்ந்த சோதனையை விவரித்த அவர், தமது அனுமதியின்றி ஓட்டல் நிர்வாகம் தமது படங்களை வெளியிட்டு விடுதியில் இருந்த தொழிலதிபர்களிடம் தாம் அந்த ஓட்டலில் தங்கியிருப்பதாக விளம்பரப்படுத்தியதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். வேண்டப்பட்டவர் யாரேனும் இறந்தால், இந்த விடுதி அறையில் அமர்ந்து அழக்கூட முடியாத அளவுக்கு துன்புறுத்தப்பட்டதாக ஹூமைமா மாலிக் வேதனை தெரிவித்துள்ளார்.