​​ ஆருஷி தல்வார் கொலை வழக்கு : பெற்றோர் விடுதலைக்கு எதிராக சி.பி.ஐ. மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆருஷி தல்வார் கொலை வழக்கு : பெற்றோர் விடுதலைக்கு எதிராக சி.பி.ஐ. மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது


ஆருஷி தல்வார் கொலை வழக்கு : பெற்றோர் விடுதலைக்கு எதிராக சி.பி.ஐ. மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது

Aug 10, 2018 9:53 PM

ஆருஷி தல்வார் கொலைவழக்கில் அவரது பெற்றோர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான சி.பி.ஐ.யின் மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு நொய்டாவைச் சேர்ந்த 13 வயது ஆருஷி தல்வார் தனது அறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும் மறுநாள் வீட்டுப் பணியாளரான ஹேம்ராஜ் விட்டு மேல்தளத்திலும் சடலமாகக் கிடந்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வார், நூபுர் ஆகியோருக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்த நிலையில், மேல் முறையீட்டு வழக்கில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை எனக்கூறி அலகாபாத் நீதிமன்றம் விடுவித்தது.

நான்கு ஆண்டு சிறைவாசத்துக்குப் பின் கடந்த ஆண்டு அவர்கள் வெளிவந்தனர். இந்நிலையில் சி.பி.ஐ.யின் மேல் முறையீட்டு மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம் ஆருஷியின் பெற்றோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.