​​ அமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு கொடிய வலி தரும் விஷ ஊசி போட்டு மரண தண்டனை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு கொடிய வலி தரும் விஷ ஊசி போட்டு மரண தண்டனை

அமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு கொடிய வலி தரும் விஷ ஊசி போட்டு மரண தண்டனை

Aug 10, 2018 4:42 PM

அமெரிக்காவில் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு கொடிய வலி தரும் விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

டென்னஸி மாகாணத்தில் 2009-ஆம் ஆண்டுக்குப் பின் முதன் முறையாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுவும், சர்ச்சைக்குரிய மூன்று மருந்துகளின் கலவையைக் கொண்டு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

1985-ஆம் ஆண்டு 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த பில்லி ஐரிக் (Billy Irick) என்பவன், தமது மரண தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தான். இதை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இதையடுத்து 59 வயதான ஐரிக், அந்நாட்டு நேரப்படி வியாழனன்று இரவு கொடிய வலி தரக் கூடிய விஷ ஊசி போட்டு கொடூரமாக கொல்லப்பட்டான்.