​​ ரசிகர் கூட்டத்தில் சிக்கிய பெண்ணை மீட்ட நடிகர் ரன்வீர் சிங்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரசிகர் கூட்டத்தில் சிக்கிய பெண்ணை மீட்ட நடிகர் ரன்வீர் சிங்


ரசிகர் கூட்டத்தில் சிக்கிய பெண்ணை மீட்ட நடிகர் ரன்வீர் சிங்

Aug 10, 2018 9:37 PM

மும்பையில் தம்மைக் காண வந்த ரசிகர் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட பெண் ஒருவரை பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் காப்பாற்றிய காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

ரன்வீர் சிங் சில தினங்களுக்கு முன், மும்பையில் பிரபல கடைத் திறப்பு விழாவில் பங்கேற்றார். இதையறிந்து அங்கு அவரது ரசிகர்கள் கூட்டமாகத் திரண்டனர். கடைத் திறப்பில் பங்கேற்ற பின், வெளியே வந்த அவருடன் ரசிகைகள் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது கூட்டம் முட்டி மோதியதால், தாம் அவர்களுடனும் புகைப்படம் எடுத்துக் கொள்வதாகவும், பொறுமை காக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும் கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதால், அதில் சிக்கிய பெண்ணை ரன்வீர் காப்பாற்றி பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்.