​​ பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் அடித்துக் கொலை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் அடித்துக் கொலை


பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் அடித்துக் கொலை

Aug 10, 2018 9:32 PM

சேலம் அருகே  பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் அடித்துக் கொலை செய்யப்பட்டு மலைப்பகுதியில் உடல் வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சேலம் அருகே சீரகாபாடி பகுதியில் தனியார் கல்லூரியின் பின்புறம் உள்ள மலைப்பகுதியில் வியாழனன்று இரவு ஒருவரின் சடலம் கிடந்தது. அப்பகுதிக்கு சென்றவர்கள் இதைப்பார்த்து ஆட்டையாம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் உயிரிழந்தவர், வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் சம்பத் என்பது தெரியவந்தது.

image

இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த சம்பத், அதே பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு வீடு புகுந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. சம்பத்தின் அத்துமீறல்களை அந்த மாணவி, பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து, ஆத்திரம் தாளாமல் சம்பத்தை சீரகாபாடி அருகே மலைப்பகுதிக்கு தனியாக அழைத்துச் சென்ற அவர்கள், கல்லால் தாக்கியும், கழுத்தை நெறித்தும் கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், உடலை அங்கேயே வீசிவிட்டு வந்ததும் விசாரணையில் வெளிவந்தது. இந்த சம்பவத்தில், மாணவியின் உறவினர்கள் 10 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.