​​ ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தும் முடிவை கைவிட திட்டம் என தகவல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தும் முடிவை கைவிட திட்டம் என தகவல்


ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தும் முடிவை கைவிட திட்டம் என தகவல்

Aug 10, 2018 9:32 PM

ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தும் முடிவை கைவிட மத்திய அரசு உத்தேசித்திருப்பதாகவும், இதுகுறித்த முடிவு அடுத்த வாரம் மேற்கொள்ளப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இனி வரும் காலங்களில், ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தப்படும் என்றும், அவை, ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

இதற்கு, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும், பிரகாஷ் ஜவடேகரின் கருத்தில் மாறுபட்டதாக கூறப்படுகிறது. ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தக் கூடாது என்றும், ஆன்லைன் முறைக்கு பதிலாக, வழக்கமான பேப்பர்-பேனா முறையிலேயே நடத்தப்பட வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தியிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தும் முடிவை மாற்றியதோடு, ஆன்லைன் முறையில் இல்லாமல், வழக்கமான முறையிலேயே தேர்வை நடத்திட மத்திய அரசு உத்தேசித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.