​​ டெல்லியில் வெடிபொருட்கள், ஆயுதங்களுடன் இருவர் கைது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெல்லியில் வெடிபொருட்கள், ஆயுதங்களுடன் இருவர் கைது

டெல்லியில் வெடிபொருட்கள், ஆயுதங்களுடன் இருவர் கைது

Aug 10, 2018 4:25 PM

சுதந்திரதினத்திற்கு சில தினங்களே உள்ள நிலையில், டெல்லியில் வெடி பொருட்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அஜிமுதீன் ஷேக் (Azimuddin Sheikh)  மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சோயாம் (Soyyam) என்ற இரண்டு நபர்களும் வெவ்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் டெல்லியில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை விற்பனை செய்து வந்திருப்பது தெரிய வந்திருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

இதனிடையே, வங்கதேசத்தில் இருந்து இயங்கி வரும் ஜமாத் உல் முஜாஹிதீன் (Jamaat-ul-Mujahideen) என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளவர்களாக சந்தேகிக்கப்படும் இருவர், தேசிய புலனாய்வு அமைப்பால் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.