​​ கள்ளச்சாராயம் விற்ற நபர்களை தாக்கிய சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றி அழித்த பொதுமக்கள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கள்ளச்சாராயம் விற்ற நபர்களை தாக்கிய சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றி அழித்த பொதுமக்கள்

கள்ளச்சாராயம் விற்ற நபர்களை தாக்கிய சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றி அழித்த பொதுமக்கள்

Aug 10, 2018 9:17 PM

நாகை அருகே கள்ளச்சாராயம் விற்ற நபர்களை தாக்கிய கிராம மக்கள், ஆயிரம் லிட்டர் சாராயத்தை வெட்டவெளியில் கொட்டி அழித்தனர்.

பாப்பாக்கோவில் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்துபவர்கள் பெண்களை கேலி கிண்டல் செய்து அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கள்ளச்சாராயம் விற்பவர்களுடன் அப்பகுதி மக்கள் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் ஒரு வீட்டில் கள்ளச்சாராயம் விற்றவர்களை பிடித்து தாக்கிய பெண்களும், இளைஞர்களும், அங்கு பதுக்கி வைத்திருந்த சாராய பாக்கெட்டுகளை வெட்டவெளியில் கொட்டி அழித்தனர். மேலும், இருவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.