​​ தஞ்சை பெரியகோவிலில் தரைதள புனரமைப்புப் பணிகளால் கோவில் கோபுரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது - தொல்லியல் துறையினர்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தஞ்சை பெரியகோவிலில் தரைதள புனரமைப்புப் பணிகளால் கோவில் கோபுரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது - தொல்லியல் துறையினர்


தஞ்சை பெரியகோவிலில் தரைதள புனரமைப்புப் பணிகளால் கோவில் கோபுரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது - தொல்லியல் துறையினர்

Aug 10, 2018 4:16 PM

தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் நடைபெற்று வரும் தரைதள புதுப்பிப்புப் பணிகளால் கோவில் கோபுரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தொல்லியல் துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் தரைதளத்தைப் புனரமைக்கும் பணிகளில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். தரைதளத்தைப் பெயர்த்துவிட்டு புதிதாக செங்கல் பதிக்கும் பணிகளால் கோவில் கோபுரம் பாதிப்புக்குள்ளாகும் என சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அதிகாரிகள், அக்கால முறைப்படி சுண்ணாம்பு, கடுக்காய், வெல்லம் உள்ளிட்டவற்றைக் கொண்டு தயாரான கலவையே செங்கற்களைப் பதிக்க பயன்படுத்தப்படுவதாகக் கூறினர். செங்கற்களும் அக்கால அளவில், தரத்தில் தயார் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுவதாகவும் கூறினர். எனவே புரளிகளை நம்ப வேண்டாம் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.