​​ குரு மறைவின்போது அரசுப் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டது குறித்த வழக்கை விசாரணைக்கு ஏற்றது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குரு மறைவின்போது அரசுப் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டது குறித்த வழக்கை விசாரணைக்கு ஏற்றது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

குரு மறைவின்போது அரசுப் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டது குறித்த வழக்கை விசாரணைக்கு ஏற்றது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

Aug 10, 2018 3:26 PM

காடுவெட்டி குரு மறைவின்போது பாமகவினர் அரசு பேருந்துகளைச் சேதப்படுத்தியதற்குப் பாமக நிறுவனர் ராமதாசிடம் இழப்பீடு பெற உத்தரவிடக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்த சுந்தரவேல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,காடுவெட்டி குரு மறைந்த நாளில் அவரது ஆதரவாளர்களும் பாமகவினரும் வன்முறையில் ஈடுபட்டதில் 73அரசுப் பேருந்துகள் சேதமடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். பொதுச்சொத்துக்களுக்கு ஏற்பட்ட இழப்பைச் சரிசெய்ய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசுப் பேருந்துகளுக்கு ஏற்பட்ட இழப்பைப் பாமக நிறுவனர் ராமதாசிடம் பெறத் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.