​​ சென்னை பாடியில் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் - 2 பேர் கைது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை பாடியில் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் - 2 பேர் கைது

சென்னை பாடியில் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் - 2 பேர் கைது

Aug 10, 2018 3:21 PM

சென்னை பாடியில் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் ஆந்திராவை சேர்ந்த இருவரை கைது செய்தனர்.

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்த பேருந்தில் வந்த இருவர் கஞ்சா கடத்தி வருவதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர்களைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் பாடியில் பேருந்தை விட்டு இறங்கி தேனிக்குச் செல்ல பேருந்துக்காக காத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் அங்குசென்று இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.