​​ திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் அஞ்சலி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் அஞ்சலி

Published : Aug 10, 2018 8:19 PMதிமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் அஞ்சலி

Aug 10, 2018 8:19 PM

சென்னை அண்ணா சமாதி அருகே அமைந்துள்ள திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மூன்றாவது நாளாக கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடம் இன்று கனிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. உழைப்பாளர் சிலையில் இருந்து மவுன ஊர்வலமாக திரண்டு வந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் திமுக கருணாநிதி நினைவிடத்தில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அமைப்புசாரா தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்காக கருணாநிதி செயல்படுத்திய திட்டங்களை அவர்கள் நினைவு கூர்ந்தனர்.

 image

வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் விக்கிரமராஜா, நடிகர் விஜயகுமார், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட மேலும் பலரும் கருணாநிதி நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தினர். தகவல் தொழில்நுட்ப பணிக்காக சென்னை வந்த ஸ்காட்லாந்தைச் சேர்ந்த தம்பதியர் கருணாநிதியின் நினைவிடத்தில் வந்து அஞ்சலி செலுத்தினர். ஜூன் மாதம் முதல் சென்னையில் தங்கியிருக்கும் தாங்கள் திமுக தலைவர் கருணாநிதியின் சிறப்புகள் குறித்து கேள்விப்பட்டும், படித்தும் அவருக்கு அஞ்சலி செலுத்த வந்திருப்பதாக கூறினர். 

திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்திற்கு நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி வந்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, தமது தந்தை சிவகுமாருக்கும், கலைஞருக்கும் இடையே இருந்து வந்த ஆழமான நட்பை நினைவுகூர்ந்தார்.