​​ TNPSC, குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
TNPSC, குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு

Published : Aug 10, 2018 7:51 PM



TNPSC, குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு

Aug 10, 2018 7:51 PM

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதற்காக இன்று முதல் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. நேர்முகத்தேர்வு உடைய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளுக்கு இந்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. துணை வணிக வரி அலுவலர், சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், தொழிலாளர்துறை துணை ஆய்வாளர் உள்பட 23 வகையான பணிகளில் உள்ள ஆயிரத்து 199 காலிப் பணியிடங்ளை நிரப்ப இந்த தேர்வு நடத்தப்படவுள்ளது.

இதற்கான தேர்வுக் கட்டணத்தை செலுத்த செப்டம்பர் 11-ஆம் தேதி இறுதி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்மைத் தேர்வு நவம்பர் 11-ஆம் தேதி காலை, மாலை என இரு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சில பணியிடங்களுக்கான குறைந்த பட்ச வயது, தேர்வு மையங்கள், ஆன்லைன் விண்ணப்பம் உள்ளிட்ட விவரங்கள் டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.