​​ மழைநீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டடங்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து பரிசீலிக்கத் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மழைநீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டடங்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து பரிசீலிக்கத் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மழைநீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டடங்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து பரிசீலிக்கத் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Aug 10, 2018 2:14 PM

மழைநீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டடங்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாகப் பரீசிலிக்கத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் தியாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கட்டடங்களில் மழைநீர் சேமிப்பு வசதி செய்ய வேண்டும் என்கிற அரசின் உத்தரவை யாரும் முறையாகப் பின்பற்றவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

மழைநீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டடங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என விதி உள்ளதையும், அண்மைக் காலங்களில் எந்த ஒரு கட்டடத்திலும் மழைநீர் சேமிப்பு வசதி ஏற்படுத்தாததையும் குறிப்பிட்டுள்ளார். மழைநீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டடங்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிடவும் கோரியுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மழைநீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டடங்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து எட்டு வாரங்களுக்குள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.