​​ உயிரி எரிபொருள் பயன்படுத்துவதன் மூலம் 12,000கோடி ரூபாய் அளவுக்கு எரிவாயு இறக்குமதி குறைக்கப்படும் - பிரதமர் மோடி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உயிரி எரிபொருள் பயன்படுத்துவதன் மூலம் 12,000கோடி ரூபாய் அளவுக்கு எரிவாயு இறக்குமதி குறைக்கப்படும் - பிரதமர் மோடி

உயிரி எரிபொருள் பயன்படுத்துவதன் மூலம் 12,000கோடி ரூபாய் அளவுக்கு எரிவாயு இறக்குமதி குறைக்கப்படும் - பிரதமர் மோடி

Aug 10, 2018 1:52 PM

எத்தனால், உயிரி எரிவாயு ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் ஆண்டுக்குப் பன்னிரண்டாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு எண்ணெய், எரிவாயு ஆகியவற்றின் இறக்குமதி குறைக்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

உலக உயிரி எரிபொருள் நாளையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, 2022ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 10விழுக்காடு எத்தனால் கலந்து எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் என்றும், 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20விழுக்காடு எத்தனால் கலந்து எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

பண்ணைக் கழிவுகள் அனைத்தையும் எரிபொருளாகப் பயன்படுத்துவதால் கழிவுகள் வீணாவது தடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கழிவுகளில் இருந்து உயிரி எரிவாயு தயாரிக்கவும், எத்தனால் மூலம் உயிரி எரிபொருள் தயாரிக்கவும் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12ஆலைகள் நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் ஆண்டுக்குப் பன்னிரண்டாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு எண்ணெய், எரிவாயு இறக்குமதியைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.