​​ தி.மு.கவின் அவசர செயற்குழு வரும் செவ்வாயன்று சென்னையில் நடைபெறும்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தி.மு.கவின் அவசர செயற்குழு வரும் செவ்வாயன்று சென்னையில் நடைபெறும்


தி.மு.கவின் அவசர செயற்குழு வரும் செவ்வாயன்று சென்னையில் நடைபெறும்

Aug 10, 2018 12:48 PM

தி.மு.க. தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம், வரும் 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தி.மு.க பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனை இன்று காலை அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து, க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 14ஆம் தேதி செவ்வாய்க் கிழமையன்று தி.மு.க. தலைமைச் செயற்குழு
அவசரக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அண்ணா அறிவாலயத்தின் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கில் காலை 10 மணியளவில் கூட்டம் நடைபெறும் என்றும், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மறைந்த திமுக தலைவர் கலைஞருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தி.மு.க. தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.