​​ டிரம்பின் மனைவி மெலானியாவின் பெற்றோருக்கு அமெரிக்க குடியுரிமை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டிரம்பின் மனைவி மெலானியாவின் பெற்றோருக்கு அமெரிக்க குடியுரிமை

டிரம்பின் மனைவி மெலானியாவின் பெற்றோருக்கு அமெரிக்க குடியுரிமை

Aug 10, 2018 12:31 PM

அமெரிக்க அதிபர் டிரம்ப் அயல்நாட்டவர் அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து வரும் நிலையில்,அவரது மனைவி மெலானியா டிரம்ப்பின் தாய், தந்தைக்கு அந்நாட்டு குடியுரிமை கிடைத்துள்ளது.

மெலனியாவின் தாய் மற்றும் தந்தை ஸ்ஸ்லோவேனிய நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அமெரிக்கக் குடியுரிமை பெற்றதை வியாழனன்று விழாவாகக் கொண்டானர். இதை அவர்களது வழக்கறிஞரும் உறுதி படுத்தியுள்ளார்.

ஆனால், எத்தனை நாட்கள் அவர்கள் விண்ணப்பித்துக் காத்திருந்தனர், முறைப்படி தான் குடியுரிமை பெற்றனரா? அதற்கான பணத்தை மெலானியா டிரம்ப் தான் வழங்கினாரா? என்பது உள்ளிட்ட விவரங்கள் வெளியாகவில்லை.