​​ நாட்டின் 72-வது சுதந்திர தினத்தையொட்டி ஒத்திகை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாட்டின் 72-வது சுதந்திர தினத்தையொட்டி ஒத்திகை

Published : Aug 10, 2018 3:12 PMநாட்டின் 72-வது சுதந்திர தினத்தையொட்டி ஒத்திகை

Aug 10, 2018 3:12 PM

நாட்டின் 72-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல் நாள் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

இதையொட்டி ஒத்திகையில், கமாண்டோ படை, குதிரைப்படை, பெண் காவலர்கள், தேசிய மாணவர் படை மற்றும் மாணவ - மாணவியர் பங்கேற்றனர். மேலும், முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வதை போலவும், ஒத்திகை நடைபெற்றது.

அதேபோன்று இந்த சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி இன்று மற்றும் 11, 13 ஆகிய மூன்று தேதிகளில் நடைபெற உள்ளது. இதனால் ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு வேறு வழிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடந்த முறை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிறப்பு காவலர்கள் சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டதைப் போல் இந்த முறை கேரளாவைச் சேர்ந்த சிறப்பு காவல்துறையினர் இந்த கலந்து கொண்டு ஒத்திகையில் பங்கேற்றுள்ளனர்.