​​ ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து வினாடிக்கு 55,000 கன அடியாக அதிகரிப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து வினாடிக்கு 55,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து வினாடிக்கு 55,000 கன அடியாக அதிகரிப்பு

Aug 10, 2018 8:16 AM

கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட கூடுதல் உபரிநீரால், ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து வினாடிக்கு 55 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன அடி உபரி நீர் திறக்கப்படுவதால், ஒகேனக்கலுக்கு நீர்வரத்து மளமளவென அதிகரித்துள்ளது. தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நேற்றிரவு வினாடிக்கு 25 ஆயிரம் கன அடிநீர் வந்த நிலையில், தற்போது 55 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

இதையடுத்து, ஒகேனக்கல்லில் கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒகேனக்கல் அருவியிலும் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.