​​ கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ 5 கோடி தமிழக அரசு நிதி உதவி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ 5 கோடி தமிழக அரசு நிதி உதவி


கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ 5 கோடி தமிழக அரசு நிதி உதவி

Aug 09, 2018 9:14 PM

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார்.

மழை, வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள முதலமைச்சர், வெள்ள நிவாரண பணிகளுக்காக  தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்படுவதாக கூறியுள்ளார். கேரள அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கும் என்றும், கேரள மக்களுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.