​​ மெரினாவில் கலைஞருக்கு நினைவிடம் குறித்து மு.க.ஸ்டாலின் கருத்துகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மெரினாவில் கலைஞருக்கு நினைவிடம் குறித்து மு.க.ஸ்டாலின் கருத்துகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

Published : Aug 10, 2018 12:40 AM

மெரினாவில் கலைஞருக்கு நினைவிடம் குறித்து மு.க.ஸ்டாலின் கருத்துகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

Aug 10, 2018 12:40 AM

கலைஞர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்ய இடம் ஒதுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துகளுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

  இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், முரசொலி நாளிதழில் வெளியான கடிதத்தில் மு.க.ஸ்டாலின் நச்சுக் கருத்தினை வெளிப்படுத்தி இருப்பதாக கூறியிருக்கிறார். ஜெயலலிதாவின் நினைவிடத்தை அப்புறப்படுத்திவிட துடித்தவர்கள் தொடுத்த 5 வழக்குகள் தான் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததாகவும் ஜெயக்குமார் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஜெயலலிதா மீது எண்ணற்ற வழக்குகளை போட்டு மனவேதனையை பரிசளித்த திமுகவினருக்கு, ஆளும் அதிமுக அரசின் வெள்ளை உள்ளம் புரியாது எனக் கூறியிருக்கிறார். திமுக தலைமை பழைய பாதையில் பயணித்து பழிச் சொல் வீசுவது கண்டு, ஆளும் அதிமுக அரசு கலங்கப்போவதுமில்லை என்றும், கடமை தவறப்போவதுமில்லை என்றும், ஜெயக்குமார் கூறியிருக்கிறார். 





  1. Vimalanaathan G Udayar

    முன்னேற்ற கழகங்களின் 50 ஆண்டு சாதனை மாறி மாறி தூற்றிக்கொள்வது.. இதனால் எரிச்சலடைந்த இளைய தலைமுறை புதிய கட்சியை நாடுவதின் பலன் மோடிக்கு செல்வது காலத்தின் கட்டாயம்

    Reply