​​ முத்தலாக் மசோதாவில் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முத்தலாக் மசோதாவில் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Published : Aug 10, 2018 12:40 AM

முத்தலாக் மசோதாவில் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Aug 10, 2018 12:40 AM

முத்தலாக் மசோதாவில் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முத்தலாக்குக்கு எதிரான முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு உரிமை மசோதா மக்களவையில் நிறைவேறியது. ஆனால் மாநிலங்களவையில் பெரும்பான்மையாக உள்ள எதிர்க்கட்சிகள் திருத்தம் செய்ய வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால் மசோதா நிறைவேறாமல் உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மசோதாவில் திருத்தம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மசோதாவின் முந்தைய நிலைப்படி முத்தலாக் கூறி விவாகரத்து செய்தால் ஜாமீனில் வர முடியாத நிலை இருந்தது.

தற்போது ஜாமீனில் வர முடியாத பிரிவில் கைதானாலும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தி அதன் பேரில் நீதிபதி ஜாமீன் வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதனிடையே மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் மறைவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.