​​ குருநாதசுவாமி கோயில் ஆடிப்பெருந்தேர் திருவிழா தொடக்கம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குருநாதசுவாமி கோயில் ஆடிப்பெருந்தேர் திருவிழா தொடக்கம்

Published : Aug 09, 2018 7:54 PM

குருநாதசுவாமி கோயில் ஆடிப்பெருந்தேர் திருவிழா தொடக்கம்

Aug 09, 2018 7:54 PM

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பிரசித்தி பெற்ற குருநாதசுவாமி கோயில் ஆடிப்பெருந்தேர் திருவிழா தொடங்கியுள்ளது.

குருநாதசுவாமி, பெருமாள், காமாட்சியம்மன் சாமிகள் மூங்கில் தட்டிகளால் செய்த 60 அடி நீளமுள்ள மகமேரு தேர்களில் சென்றன. திருவிழாவை முன்னிட்டு குதிரை, மாட்டு சந்தைகள் தொடங்கியுள்ளன. காங்கேயம், ஆந்திரா வகை ஓங்கோல் இனம், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் இன நாட்டு மாடுகள், பர்கூர் இன மாடுகள், முறா இன எருமைகள், சிந்து மாடுகள் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளன.

இதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காட்டியவார், இங்கிலீஷ் பீட், மார்வார், வெள்ளை சட்டை, மட்ட குதிரை என பல்வேறு ரக குதிரைகளும் விற்பனைக்கு வந்துள்ளன.