​​ ஸ்ரீரங்கம் கோயில் சிலை கடத்தல் புகார் தொடர்பாக 6 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்ரீரங்கம் கோயில் சிலை கடத்தல் புகார் தொடர்பாக 6 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஸ்ரீரங்கம் கோயில் சிலை கடத்தல் புகார் தொடர்பாக 6 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Aug 09, 2018 6:49 PM

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் சிலை கடத்தல் புகார் தொடர்பாக 6 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயில் மூலவர் சிலை திருடப்பட்டிருப்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த கோரி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், உற்சவர் சிலையும், பழங்கால பொருட்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், பல முறை புகாரளித்தும் காவல்துறையும், இந்து சமய அறநிலையத்துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2012-ல் ஆகம விதிகளுக்குட்பட்டு ஸ்ரீரங்கம் கோயில் சீரமைப்பு பணிகளில் சிலைகள் சீரமைக்கப்பட்டதாகவும், ஆனால் சிலைகள் மாயமானதாக கூறும் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்றும் விளக்கம் இந்த சமய அறநிலையத்துறை தரப்பில் அளிக்கப்பட்டது. மேலும், ஆகம விதிகளுக்குட்பட்டு தான் அதிகாரிகள் கோயிலுக்குள் சென்று விசாரணை நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ள கோயில் நிர்வாகம், கடவுளுக்கும் தனி மனித சுதந்திரம் இருப்பதாக தெரிவித்தது.

இதனையடுத்து, ஸ்ரீரங்கம் கோயிலில் சிலை கடத்தல் புகார் தொடர்பாகவும், ஆயிரம் கால் மண்டபத்தையும் ஆய்வு செய்து 6 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.