​​ குழந்தை அழுததற்காக விமானத்தில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றப்பட்டதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் மீது புகார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குழந்தை அழுததற்காக விமானத்தில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றப்பட்டதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் மீது புகார்

குழந்தை அழுததற்காக விமானத்தில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றப்பட்டதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் மீது புகார்

Aug 09, 2018 3:50 PM

லண்டனில் குழந்தை அழுததற்காக இரு இந்தியக் குடும்பங்களை விமானத்தில் இருந்து இறக்கிவிட்டதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் மீது குற்றம்சாட்டப்படுகிறது.

இந்திய போக்குவரத்துத் துறை அமைச்சரக அதிகாரி ஒருவர் குடும்பத்துடன் கடந்த மாதம் 23-ஆம் தேதி லண்டனில் இருந்து பெர்லின் சென்றார். அப்போது, விமானம் ஓடுதளத்தில் பயணித்த போது தமது 3 வயது மகன் தனி இருக்கையில் அமராமல் அழுததால் விமானப் பணிக்குழுவைச் சேர்ந்த ஒருவர் மிரட்டி, விமானத்தை மீண்டும் முனையத்துக்குத் திருப்பி தங்களை இறக்கிவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

குழந்தையின் அழுகையை நிறுத்த தங்களுக்குப் பின்னால் இருந்த மற்றொரு இந்தியக் குடும்பம் பிஸ்கட் கொடுத்ததால் அவர்களையும் சேர்ந்து இறக்கிவிட்டதோடு, இனப் பாகுபாட்டை சுட்டிக் காட்டி வசைபாடுவது போல் தங்களை திட்டியதாகவும், விமானப் போக்குவத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.