​​ கலைஞரின் இறுதி பயணத்தால் சென்னையில் வீதிகள் மக்கள் வெள்ளத்தால் ததும்பி திணறியது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கலைஞரின் இறுதி பயணத்தால் சென்னையில் வீதிகள் மக்கள் வெள்ளத்தால் ததும்பி திணறியது

Published : Aug 09, 2018 12:49 AM

கலைஞரின் இறுதி பயணத்தால் சென்னையில் வீதிகள் மக்கள் வெள்ளத்தால் ததும்பி திணறியது

Aug 09, 2018 12:49 AM

திமுக தலைவரும், திராவிட பெருநிலத்தின் தலைவருமான கலைஞரின் இறுதி பயணத்தால் சென்னையில் வீதிகள் மக்கள் வெள்ளத்தால் ததும்பி திணறியது.

கடந்த மாதம் 28-ஆம் தேதி அதிகாலை தொடங்கி அடுத்த பத்து நாட்கள் வரை நோயோடு போராடி, பதினொருவது நாளான ஆகஸ்டு 7-ஆம் தேதி மாலை 6.10 மணியளவில் காலமானார்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையின் முன் திரண்டு இருந்த தொண்டர்கள் கதறி அழ , அந்த இடமே கண்ணீர் வெள்ளத்தால் மிதக்க ஆரம்பித்தது. 

இதனிடயே கலைஞரின் உடலை இறுதி ஊர்வலத்திற்கும், இறு அஞ்சலிக்கும் தயார்படுத்தும் பணிகள் மருத்துவமனையில் நடைபெற்றன. ஏறத்தாழ மூன்று மணி நேரத்திற்கு பின்னர் இரவு 9.10 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து கலைஞரின் உடல் தனியார் ஆம்புலனஸ் மூலம், காவேரி மருத்துவமனையில் இருந்து அவரது புகழ் பெற்ற இல்லமாக கோபாலபுரம் இரண்டாவது தெருவில் உள்ள வீட்டிற்கு புறப்பட்டது.தொண்டர்களின் கதறலுக்கும், கண்ணீருக்கும் மத்தியில் மெல்ல, மெல்ல ஊர்ந்து சென்றது கலைஞரின் பொன்னுடலை தாங்கிய வாகனம்.

மறைந்த முதலமைச்சர் ஜெயல லிதாவின் உடலை ஏற்றிச் சென்ற ஆம்புலன்சை ஓட்டிய அதே ஓட்டுநர் தான் கருணாநிதியின் உடல் தாங்கிச் சென்ற ஆம்புலன்சையும் ஓட்டிச் சென்றார். மக்கள் வெள்ளத்தில் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்ற அந்த வாகனம் ஆழ்வார் பேட்டையில் இருந்து 4 நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோபாபுரத்தை அடைய ஒரு மணி நேரத்திற்கும் மேலானது.

கோபாலபுரம் இல்லத்திற்கு முன்பும் கூடியிருந்த தொண்டர்களின் பெருங்கூட்டத்திற்கு மத்தியில் கலைஞரின் உடல் இறக்கப்பட்டு, வீட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டது.

வீட்டிற்குள், உறவினர்கள், குடும்பத்தினர் இறுதி அஞ்சலியும், சடங்குகளையும் செய்த பின்னர், வீட்டுக்கு முன் கூடி இருந்த தொண்டர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.

நள்ளிரவு சுமார் ஒரு மணிக்கு மேல் அளவில் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து கலைஞரின் உடல் சி.ஐ.டி காலனியில் உள்ள கனிமொழியின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கும் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

அதிகாலை 4 மணிக்கு மேல் கலைஞரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சிஐடி காலனி வீட்டில் இருந்து ராஜாஜி அரங்கத்திற்கு கொண்டு வரப்பட்டது.

விடிய, விடிய நடைபெற்ற நிகழ்ச்சியில் குடும்பத்தினரோடு, திமுக தொண்டர்கள் பொதுமக்களும் பங்கேற்றனர். தொண்டர்களின் முழக்கங்களுக்கு இடையே, கண்ணீருக்கும், கதறலுக்கும் இடையே அவரது உடல் ராஜாஜி அரங்கத்திற்கு கொண்டு வைத்து வைக்கப்பட்டது.