​​ வங்கதேசத்தில் சாலைவிபத்தை ஏற்படுத்துவோருக்கு கடும் தண்டனை - புதிய சட்டம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வங்கதேசத்தில் சாலைவிபத்தை ஏற்படுத்துவோருக்கு கடும் தண்டனை - புதிய சட்டம்

Published : Aug 07, 2018 11:34 AMவங்கதேசத்தில் சாலைவிபத்தை ஏற்படுத்துவோருக்கு கடும் தண்டனை - புதிய சட்டம்

Aug 07, 2018 11:34 AM

வங்கதேசத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு தண்டனையை அதிகரிப்பதற்கான புதிய சட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தாகாவில் கடந்த 29 ஆம் தேதி அதிவேகமாக சென்ற பேருந்து மோதி இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடந்த 9 நாட்களாக இளைஞர்கள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தால் போக்குவரத்து முடங்கியது.

இந்நிலையில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், போக்குவரத்து விதிமீறல் தொடர்பான புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அதிவேகமாக வாகனங்களை ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்துவோருக்கு 5ஆண்டுகள் ஜாமீனில் வெளிவர முடியாத சிறைத்தண்டனை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.