​​ சிலை கடத்தல் கும்பலை விரட்டி பிடித்த ஐஜி பொன் மாணிக்கவேல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிலை கடத்தல் கும்பலை விரட்டி பிடித்த ஐஜி பொன் மாணிக்கவேல்

சிலை கடத்தல் கும்பலை விரட்டி பிடித்த ஐஜி பொன் மாணிக்கவேல்

Aug 07, 2018 2:43 AM

சென்னை போரூரில் காரில் அம்மன் சிலையை கடத்திச் சென்ற கும்பலை ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். 

image

சென்னை போரூர் அருகே கார் ஒன்றில் சிலை உடன் மர்ம கும்பல் வலம் வருவதாக ஐஜி பொன் மாணிக்கவேலுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது தலமையில் காவல்துறையினர் அங்கு சுற்றி வந்த நானோ கார் ஒன்றை மறித்தனர் அவர்கள் நிற்காமல் வேகமாக செல்லவே, அந்த காரை விரட்டிச்சென்று காருக்குள் இருந்த 5 பேரையும் மடக்கி பிடித்தனர். 

காருக்குள் சோதனை யிட்ட போது அதில் தங்க தாலியுடன் உலோகத்திலான அம்மன் சிலை ஒன்று சாக்கு பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது

விசாரணையில் அவர்கள் திருவள்ளூரை சேர்ந்த கோபி நாத், கணேஷ், யுவ நாதன், சக்திவேல், கோபி என்பது தெரியவந்தது. எந்த கோவிலில் திருடப்பட்ட சிலை என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சிலையை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட நானோ கார் பறிமுதல். மேலும் கடத்தல் காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட சிலை பழமையானதா ? என்பதை கண்டறிய சோதனை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.