​​ சிலை கடத்தல் விவகாரத்தில் வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் சார்ந்துள்ளன : அமைச்சர் காமராஜ்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிலை கடத்தல் விவகாரத்தில் வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் சார்ந்துள்ளன : அமைச்சர் காமராஜ்

சிலை கடத்தல் விவகாரத்தில் வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் சார்ந்துள்ளன : அமைச்சர் காமராஜ்

Aug 05, 2018 9:34 PM

சிலை கடத்தல் விவகாரத்தில் வெளிமாநிலங்களும், வெளிநாடுகளும் சம்பந்தப்பட்டிருப்பதால், அதுகுறித்த வழக்குகள் சி.பி.ஐ.யிடம் அளிக்கப்பட்டிருப்பதாக உணவுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பயிர்க்கடன் வழங்கும் பணி தொடக்க விழா, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முதல்கட்டமாக 381 விவசாயிகளுக்கு ஒரு கோடியே 67 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கிய அமைச்சர் காமராஜ், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழக கோயில்களில் சிலைகள் பாதுகாப்பு மையத்தை முதல்முறையாக அ.தி.மு.க. அரசுதான் ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.