​​ நாகர்கோவிலில் தாய் மற்றும் இரு குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாகர்கோவிலில் தாய் மற்றும் இரு குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழப்பு

நாகர்கோவிலில் தாய் மற்றும் இரு குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழப்பு

Aug 05, 2018 6:39 PM

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், தாய் மற்றும் இரு குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகர்கோவில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சரண்யா இன்று காலை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவருக்கு அருகிலேயே மகள் ரிப்கா, மகன் ஐசக் ஆப்ரகாம் ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார், மூவரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவர் அருணாச்சலத்தைப் பிடித்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூறாய்வு மற்றும் விசாரணைக்குப் பின்னரே முழு விவரம் தெரிய வரும் என போலீசார் கூறியுள்ளனர்.