​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வரும் 10ஆம் தேதி கட்டிடக் கலை பொறியியல் கலந்தாய்வு

Published : Aug 05, 2018 12:47 PM

வரும் 10ஆம் தேதி கட்டிடக் கலை பொறியியல் கலந்தாய்வு

Aug 05, 2018 12:47 PM

கட்டிடக் கலை பொறியியல் கலந்தாய்வு வருகிற 10ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற்று வரும் நிலையில், கட்டிடக் கலை பொறியியலுக்கான கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் குறைவாகவே உள்ளது என்பதால் நேரடியாக நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பிளஸ் டூ மதிப்பெண்கள் மற்றும் NATA எனப்படும் தேசிய கட்டிடக் கலை திறனாய்வு போட்டி மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 8 மணிக்கு தொடங்குகிறது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது.