​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து வைக்கும் ட்ரம்பின் கொள்கையில் தமக்கு உடன்பாடில்லை - அவரது மகள் இவாங்கா

Published : Aug 04, 2018 12:29 AM

குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து வைக்கும் ட்ரம்பின் கொள்கையில் தமக்கு உடன்பாடில்லை - அவரது மகள் இவாங்கா

Aug 04, 2018 12:29 AM

புலம்பெயர்ந்து வருவோரின் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து வைக்கும் ட்ரம்பின் கொள்கையில் தமக்கு உடன்பாடில்லை என அவரது மகள் இவாங்கா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அளித்துள்ள ஒரு பேட்டியில், தமது தாயார் மெலேனியா ட்ரம்ப் (Melania Trump) கூட செக் குடியரசில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்தான் என்று கூறிய இவாங்கா, இந்த விவகாரத்தை உணர்வு பூர்வமாக தம்மால் புரிந்து கொள்ள முடிவதாகவும் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் தனித்துவிடப்படுவதை ஊக்குவிக்க முடியாது என்றும் இவாங்கா தெரிவித்துள்ளார். குழந்தைகளை பிரித்துவைக்கும் முடிவை அதிபர் ட்ரம்ப் மட்டுமே எடுக்கவில்லை என்றாலும், மோசமான முடிவு என அவரது குழுவினரே எச்சரித்த பின்னரும் அதனைத் தொடர்ந்ததுதான் தவறு என்றும் இவாங்கா கூறியுள்ளார்.