​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திமுக தலைவர் மு. கருணாநிதி நூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்வார் - முன்னாள் பிரதமர் தேவகவுடா

Published : Aug 04, 2018 12:19 AM



திமுக தலைவர் மு. கருணாநிதி நூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்வார் - முன்னாள் பிரதமர் தேவகவுடா

Aug 04, 2018 12:19 AM

திமுக தலைவர் மு. கருணாநிதி நூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்வார் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.

சென்னை காவேரி மருத்துவமனையில் 8-ஆம் நாளாக சிகிச்சை பெற்று வரும் கருணாநிதிக் காண அவர் நேரில் வந்தார். மருத்துவமனையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதியின் நலம் குறித்து தேவகவுடா விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவகவுடா, மாநிலத்தில் மட்டுமின்றி தேசிய அளவிலும் நிலையான ஆட்சியமைய கருணாநிதி முக்கிய பங்காற்றியதாக குறிப்பிட்டார்.