​​ போதைப் பொருள்கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட மோப்ப நாயின் தலைக்கு ரூ.4.80 லட்சம் விலை நிர்ணயித்த கடத்தல்காரர்கள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போதைப் பொருள்கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட மோப்ப நாயின் தலைக்கு ரூ.4.80 லட்சம் விலை நிர்ணயித்த கடத்தல்காரர்கள்

போதைப் பொருள்கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட மோப்ப நாயின் தலைக்கு ரூ.4.80 லட்சம் விலை நிர்ணயித்த கடத்தல்காரர்கள்

Aug 03, 2018 11:28 PM

கொலம்பியாவில் போதைப் பொருள்கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட மோப்ப நாயின் தலைக்கு கடத்தல்காரர்கள் 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயித்துள்ளனர்.

6 வயதான சோம்ப்ரா எனும் ஜெர்மன் செபர்ட் இனத்தைச் சேர்ந்த நாய் தமது வாழ்நாளில் பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்ட 9 டன் போதைப் பொருட்களைக் கண்டுபிடித்துள்ளது. அதன் அபாரமான மோப்ப சக்தி, போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

image

துறைமுகம், விமான நிலையம் என பம்பரமாக சுற்றித் திரிந்து பணியாற்றும் சுறுசுறுப்பான அந்த மோப்ப நாயைத் தீர்த்துக் கட்டத் திட்டமிட்டுள்ள கடத்தல் கும்பல் அதன் தலைக்கு 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயித்துள்ளது. அந்த மோப்ப நாயின் பாதுகாப்பு கருதி, அதை போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சேவையிலிருந்து அதிகாரிகள் நீக்கியுள்ளனர்.