​​ சிலை கடத்தல் வழக்குகளை CBI-க்கு மாற்றியதை எதிர்த்து டிராபிக் ராமசாமி முறையீடு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிலை கடத்தல் வழக்குகளை CBI-க்கு மாற்றியதை எதிர்த்து டிராபிக் ராமசாமி முறையீடு

சிலை கடத்தல் வழக்குகளை CBI-க்கு மாற்றியதை எதிர்த்து டிராபிக் ராமசாமி முறையீடு

Aug 03, 2018 5:04 PM

சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து மனு தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகக் கோவில்களில் சிலைகள் திருட்டுப் போனது குறித்து சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் விசாரித்து வந்தார். இந்நிலையில் சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றித் தமிழக அரசு ஆணை வெளியிட்டது. இதை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் டிராபிக் ராமசாமி ஒரு முறையீடு செய்தார்.

கிரானைட் ஊழல், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட வழக்குகளில் சிபிஐ விசாரணை கோரியும் அதற்குத் தமிழக அரசு மறுத்து வருவதைக் குறிப்பிட்டார். சிலைக்கடத்தல் வழக்கை ஐஜி பொன் மாணிக்கவேல் விசாரிக்கக் கூடாது என்பதற்காகவே இந்த வழக்கைத் தமிழக அரசு சிபிஐக்கு மாற்றியுள்ளதாகத் தெரிவித்தார்.

இது குறித்து மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து மனு தாக்கல் செய்ய உள்ளதாக டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.