​​ ஆதீனமாக அல்ல, இந்திய குடிமகனாக மட்டும் மதுரை ஆதீன மடத்திற்குள் செல்ல நித்யானந்தாவுக்கு அனுமதி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆதீனமாக அல்ல, இந்திய குடிமகனாக மட்டும் மதுரை ஆதீன மடத்திற்குள் செல்ல நித்யானந்தாவுக்கு அனுமதி

ஆதீனமாக அல்ல, இந்திய குடிமகனாக மட்டும் மதுரை ஆதீன மடத்திற்குள் செல்ல நித்யானந்தாவுக்கு அனுமதி

Aug 03, 2018 1:42 AM

மதுரை ஆதீன மடத்திற்குள், இளைய ஆதீனம் என்ற எண்ணத்துடன் செல்லாமல், இந்திய குடிமகனாக நித்யானந்தா சென்றுவருவதற்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக நித்யானந்தா தொடர்ந்த வழக்கில் வியாழனன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன், நித்யானந்தா ஆதீன மடத்திற்குள் செல்லும் போது தனி மனிதனாக செல்ல வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கூட்டமாக செல்ல கூடாது என்றும் உத்தரவிட்டார்.

ஆதீன மடத்திற்குள் அன்னதானம் செய்வது உள்ளிட்ட செலவுகளை நித்யானந்தாவே ஏற்க வேண்டும் என்றும் நீதிபதி ஆணையிட்டார். நித்யானந்தா இளைய ஆதீனம் என்ற எண்ணம் இல்லாமல், இந்திய நாட்டின் குடிமகன் என்ற உரிமையில் மதுரை ஆதீன மடத்திற்குள் செல்ல உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தாது விளக்குதூண் காவல் ஆய்வாளர் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி முரளிதரன் ஆணையிட்டார்.