​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வீட்டில் பணிபுரிவோருக்கான அடிப்படை ஊதியம் திருத்தி அமைப்பு

Published : Aug 03, 2018 1:39 AM



வீட்டில் பணிபுரிவோருக்கான அடிப்படை ஊதியம் திருத்தி அமைப்பு

Aug 03, 2018 1:39 AM

வீட்டில் பணிபுரிவோருக்கான ஊதியத்தை திருத்தி அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதில் மாநகர் பகுதிகளில் வீட்டில் செவிலியராக பணிபுரிவோருக்கு மாதம் 8,856 ரூபாயும், நகராட்சி பகுதிகளில் 7,971 ரூபாயும், இதர பகுதிகளில் 7,527 ரூபாயும் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சமையலர், தோட்ட பராமரிப்பாளர் ஆகியோருக்கு வீதம் 8,605 ரூபாய், 7,745 ரூபாய், 7,315 ரூபாய் வழங்க வேண்டும்.

துணி துவைப்போர், குழந்தைகள் மற்றும் முதியவரை பார்த்துக் கொள்பவர், சமையல் உதவியாளர் ஆகியோருக்கு மாநகராட்சிகளில் 8 ஆயிரத்து 355 ரூபாயும், நகராட்சி பகுதிகளில் 7,520 ரூபாயும், 7,102 ரூபாயும் வழங்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.