​​ தற்கொலையை நேரலையாக ஒளிபரப்பி, அதை 2,000 பேர் பார்த்த போதும் ஒருவர்கூட புகாரளிக்கவில்லை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தற்கொலையை நேரலையாக ஒளிபரப்பி, அதை 2,000 பேர் பார்த்த போதும் ஒருவர்கூட புகாரளிக்கவில்லை

தற்கொலையை நேரலையாக ஒளிபரப்பி, அதை 2,000 பேர் பார்த்த போதும் ஒருவர்கூட புகாரளிக்கவில்லை

Aug 01, 2018 11:04 PM

ஹரியானா மாநிலம் குருகிராமில் ஒருவர் தமது தற்கொலையை நேரலையாக ஒளிபரப்பி, அதை 2 ஆயிரம் பேர் பார்த்த போதும் ஒருவர்கூட போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கவில்லை.

ஜடோலி பகுதியில் வசித்த அமித் சவுகான் என்பவர், தமது மனைவி குழந்தைகளோடு வீட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, மனமுடைந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதை முன்கூட்டியே பேஸ்புக்கில் அமித் அறிவித்து, தற்கொலையை நேரலையாக ஒளிபரப்பிய போதும், அதை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்தபோதும், ஒருவர் கூட அருகில் வசிப்பவர்களை அழைத்து தடுத்து நிறுத்தச் செய்யவோ, போலீசாருக்குத் தகவல் அளிக்கவோ இல்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மறுநாள் காலை தகவல் அறிந்த பின் போலீசார் அங்கு சென்று விசாரித்த போது, அந்த நபர் மனநலமின்மைக்காக சிகிச்சை எடுத்து வந்ததாகவும், அவரது மரணத்துக்கு யாரும் காரணமல்ல என்று உறவினர்களும் புகார் அளிக்க மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.