​​ மீண்டும் ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டார் நவாஸ் ஷெரீப்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மீண்டும் ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டார் நவாஸ் ஷெரீப்


மீண்டும் ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டார் நவாஸ் ஷெரீப்

Aug 01, 2018 12:56 PM

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீஃப் மருத்துவமனையில் இருந்து சிறைக்குத் திரும்பினார். நவாஸ் ஷெரீப்புக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து ராவல்பிண்டி அடியாலா சிறையில் இருந்து  இஸ்லாமாபாத்தில் உள்ள PIMS மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்கு இரு தினங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து, உடல் நலம் தேறியுள்ளதால் அவர் மருத்துவமனையில் இருந்து செல்லலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஏற்கெனவே நவாசின் விருப்பத்துக்கு மாறாகவே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

நடைபயிற்சி மேற்கொள்ள முடியாததால் மீண்டும் சிறைக்குச் செல்லவேண்டும் என்றே அவர் தெரிவித்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.