​​ பிரேசில் அமேஸான் காட்டில் ஒரு அதிசயப்பிறவி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரேசில் அமேஸான் காட்டில் ஒரு அதிசயப்பிறவி


பிரேசில் அமேஸான் காட்டில் ஒரு அதிசயப்பிறவி

Aug 01, 2018 11:38 AM

அமேஸான் காடுகளில் தன்னந்தனியாக 22 ஆண்டுகள் வசித்துவரும் நபர் பற்றிய சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரேசில் நாட்டில் உள்ள ரோண்டோனியா பகுதியில் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் தனியாக வசித்து வந்துள்ளார்.

அவரது உறவினர்கள் அனைவரும் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளால் கொல்லப்பட்டு விட, பெயர் தெரியாத அந்த நபர் மட்டும் தப்பிப் பிழைத்துள்ளார். விலங்குகளைப் பிடிக்கவும், மற்றவர்களிடம் இருந்து தான் தப்பிக்கவும் குழிகளை பயன்படுத்தி வருகிறார்.

பறவைகள், குரங்குகள், காட்டுப் பன்றி ஆகியவற்றை வேட்டையாடி அதனைச் சாப்பிட்டு வருகிறார். இவரை கடந்த 1998ம் ஆண்டு ஃபுனாய் என்ற குழு வீடியோ எடுத்தது. அதன் பின்னர் அவரை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்று பிரேசில் அரசு உத்தரவிட்டுள்ளது.